விசா கொள்கையில் மாற்றத்தை அறிவித்த சீனா : 09 நாடுகளுக்கு கிடைக்கும் சலுகை!
சீனா அதன் விசா கொள்கைளில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
அதன்படி பல்கேரியா, ருமேனியா, குரோஷியா, மாண்டினீக்ரோ, வடக்கு மாசிடோனியா, மால்டா, எஸ்டோனியா, லாட்வியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட ஒன்பது புதிய நாடுகள் விசா இன்றி பயணத்தை மேற்கொள்ள முடியும் என அறிவித்துள்ளது.
நவம்பர் 30 முதல் நடைமுறைக்கு வரும் இந்த திட்டம், சாதாரண பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் சுற்றுலா, வணிகம், குடும்ப வருகைகள் மற்றும் பரிமாற்றங்கள் போன்ற நோக்கங்களுக்காக 30 நாட்கள் வரை விசா இல்லாமல் சீனாவுக்குள் நுழைய அனுமதிக்கிறது.
னாவின் விசா இல்லாத திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள நாடுகளின் மொத்த எண்ணிக்கையை 38 ஆகக் கொண்டு வருகின்றன, இவற்றில் 29 ஐரோப்பிய நாடுகள் ஆகும்.
(Visited 2 times, 2 visits today)