Site icon Tamil News

வட கொரியாவின் எச்சரிக்கையையும் மீறி கூட்டு இராணுவ பயிற்சிகளை ஆரம்பித்த அமெரிக்கா மற்றும் தென்கொரியா!

தென் கொரியா மற்றும் அமெரிக்க இராணுவங்கள் தங்களின் கூட்டு இராணுவ பயிற்சியை இன்று (திங்கட்கிழமை) ஆரம்பித்துள்ளன.

இந்த பயிற்சி நடவடிக்கை 11 நாட்களுக்கு நடைபெறவுள்ளது. இதன்போது ஃப்ரீடம் ஷீல்ட் 23 எனப்படும் கணினி உருவாக்கப்படுதல், மற்றும் வாரியர் ஷீல்ட் என அழைக்கப்படும் ஒருங்கிணைந்த பயிற்சிகளை முன்னெடுக்கவுள்ளது.

இந்த நிலையில், இந்த பயிற்சி நடைவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வடகொரியா நீர்மூழ்க்கி கப்பலில் இருந்து ஏவுகணைகளை ஏவி எச்சரிக்கை விடுத்திருந்தது.

அதேநேரம் வடகொரிய தலைவர் கிம் ஜொங்உன் தனது துருப்புகளுக்கு போர் தயாரிப்பு நவர்வுகளை முன்னெடுக்குமாறு உத்தரவு பிறப்பித்திருந்தார்.

Exit mobile version