Site icon Tamil News

ரஸ்யாவிலிருந்து உக்ரைனிற்கு தப்பிச்சென்ற விமானி ஸ்பெயினில் சடலமாக மீட்பு

கடந்தவருடம் இடம்பெற்ற இரகசிய நடவடிக்கையின் போது உக்ரைனிற்கு தப்பிவந்த ரஸ்ய விமானி ஸ்பெயினில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

உக்ரைனின் புலனாய்வு பிரிவினர் இதனை தெரிவித்துள்ளனர். மாக்சிம் குஸ்மினோவ் என்ற விமானியே உயிரிழந்தநிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

தொடர்மாடியொன்றின் வாகனத்தரிப்பிடத்தில் இவரது உடல் மீட்கப்பட்டுள்ளதாக உக்ரைனின் புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

அலிகண்டோவில் உள்ள வில்லாஜோயோசா நகரில் இவரது உடல் மீட்கப்பட்டுள்ளதாகவும் அருகில் உள்ள பகுதியில்கார் ஒன்று எரியுண்ட நிலையில்மீட்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

முதலில் இது குற்றவாளிகும்பலின் நடவடிக்கை என ஸ்பெய்ன் பொலிஸார் கருதியுள்ளனர் எனினும் பின்னரே இது ரஸ்ய உக்ரைன் மோதல் தொடர்பான விவகாரம் என்பது தெரியவந்துள்ளது.

கடந்த வருடம் ஆகஸ்ட்மாதம் குஸ்மினோவ் இரண்டு தளங்களிற்கு இடையிலான விமானபறத்தலின் போது ரஸ்ய தரப்பிலிருந்து உக்ரைனிற்கு தப்பிவந்தார்.

ஹெலிக்கொப்டரில் எஸ்யு 27- எஸ்யு 30 போர்விமானங்களி;ற்கான உதிரிப்பாகங்களை கொண்டு செல்லும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த இவர் தனது ஹெலிக்கொப்டர் மூலம் உக்ரைனின் கட்டுப்பாட்டு பகுதியில் தரையிறங்கினார்.

ஆறுமாத இரகசிய நடவடிக்கையின் பயனாக இவரை உக்ரைனின் பக்கம் வரச்செய்ததாக உக்ரைனின் புலனாய்வுபிரிவினர் தெரிவித்திருந்தனர்.

அதற்கு முன்னதாக அவரது குடும்பத்தினர் ரஸ்யாவிலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். குஜ்மினோவ் மரணம் உறுதி செய்யப்பட்டால் அதற்கு ரஸ்ய அரசாங்கமே காரணம் என்ற குற்றச்சாட்டுகள் வெளியாகலாம்.

கடந்தகாலங்களில்அதன் கொலையாளிகள் ஐரோப்பாவில் பல கொலைகளில் ஈடுபட்டுள்ளனர்.

Exit mobile version