Site icon Tamil News

மின்னணு இராணுவ அழைப்பு முறையை அறிமுகப்படுத்தும் ரஷ்யா!

மின்னணு இராணுவ அழைப்பு முறையை ரஷ்யா அறிமுகப்படுத்தவுள்ளது.  இதன்மூலம் பலர் இராணுவத்தில் சேரலாம் என ரஷ்யா நம்பிக்கைக் கொண்டுள்ளது.

இந்த திட்டத்திற்கான வரைவு இன்று விவாதிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன் இந்த முறை அணித்திரல் நடவடிக்கையை எளிதாக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்னியலுக்கான சம்மன் கிடைத்தவுடன், இராணுவப் பதிவு அலுவலகத்தில் ஆஜராகத் தவறிய குடிமக்கள் தானாகவே வெளிநாடு செல்ல தடை விதிக்கப்படும் என ரஷ்ய நாடாளுமன்றத்தின் பாதுகாப்புக் குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவின் சிறப்பு இராணுவ நடவடிக்கைக்கு ஆதரவளிக்கும் வகையில் கடந்த ஆண்டில் 3 இலட்சம் பேர் அணித்திரட்டல் மூலம் சேர்க்கப்பட்டிருந்தனர்.

Exit mobile version