Site icon Tamil News

மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட சர்வாதிகாரியின் பேரன் – கட்டியணைத்த பொதுமக்கள்

தென் கொரியாவின் கடைசி சர்வாதிகாரி சுன் டூ-ஹ்வான் 1980ம் ஆண்டு நடத்திய ராணுவ அத்துமீறலுக்கு அவரது பேரன் பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.

1980 ஆண்டு ஜனநாயக சார்பு ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தென் கொரியாவில் கூடத் தொடங்கினர்.அத்துடன் சர்வாதிகாரி சுன் டூ-ஹ்வான் இராணுவ ஆட்சியை எதிர்த்து மக்கள் பெரும் போராட்டத்திலும் குதிக்க தொடங்கினர்.அந்த வகையில் 1980ம் ஆண்டு குவாங்ஜு நகரில் இராணுவ சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தை கலைக்க சர்வாதிகாரி சுன் டூ-ஹ்வான் மிகப்பெரிய ராணுவ தாக்குதலை முன்னெடுத்தார், இதில் 200 பேர் வரை கொல்லப்பட்டதுடன், பலர் சித்திரவதை செய்யப்பட்டனர் மற்றும் பலர் காணாமல் போனார்கள்.இது தென் கொரியாவின் வரலாற்றில் மிகவும் அழியாத வடுவாக இருக்கும் நிலையில், இதுவரை சர்வாதிகாரி சுன் டூ-ஹ்வான் தரப்பில் இருந்து எந்தவொரு மன்னிப்பும் கோரப்படாமல் இருந்தது.

இந்நிலையில் 1980ம் ஆண்டு சர்வாதிகாரி சுன் டூ-ஹ்வான் நடத்தப்பட்ட இராணுவ அத்துமீறலுக்கு அவரது பேரன் சுன் வூ-வொன பொதுமக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.கடந்த வெள்ளி கிழமை அவருடைய தாத்தா சுன் டூ-ஹ்வான் அவர்களின் இராணுவ ஆட்சியை எதிர்த்து போராடியவர்களின் தைரியத்தை சுன் வூ-வொன்(27) பாராட்டி இருந்தார்.அத்துடன் தனது தாத்தா நடத்தியது மிகப்பெரிய குற்றம் என்றும் “இதற்காக முன்னபே மன்னிப்பு கேட்காததற்காக வருந்துவதாகவும் தெரிவித்துள்ளார்.மேலும் சுன் வூ-வொன் நகரின் தேசிய கல்லறைக்கு வந்து உயிர் பிரிந்தவர்களுக்கு மரியாதையும் செலுத்தினார்.

சுன் வூ வொன்-னின் மன்னிப்பை சில பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் வரவேற்றுள்ளது, அத்துடன் நகரின் தேசிய கல்லறையில் ஒருவர் சுன் வூ-வொனை கட்டித் தழுவி ஆறுதல் தெரிவித்தார்.1988ம் ஆண்டு சர்வாதிகாரி சுன் டூ-ஹ்வான் ஆட்சி காலம் முடிவுக்கு வந்தது, பின் பல்வேறு மோசடி மற்றும் ஊழல் குற்றங்களுக்காக தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.இறுதியில் 2021ம் ஆண்டு தனது 90 வயதில் சுன் டூ-ஹ்வான் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Exit mobile version