உலகம்

போர் நிறுத்தங்கள் மதிக்கப்பட வேண்டும் – அன்டோனியோ குட்டெரெஸ்!

மத்திய கிழக்கில் வன்முறை மீண்டும் அதிகரித்திருப்பது குறித்து தாம் “அதிர்ச்சி” அடைவதாக ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளார்.

காசாவிற்குள் செல்லும் எல்லைக் கடப்புகளை மீண்டும் திறக்குமாறும் அவர் இஸ்ரேலிடம் வலியுறுத்தியுள்ளார்.

“அனைத்துத் தாக்குதல்களும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் லெபனான், ஈரான் மற்றும் காசாவில் உள்ள போர் நிறுத்தங்கள் முழுமையாக மதிக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், காசாவிற்குள் செல்லும் எல்லைக் கடப்புகளை மூடுவதற்கான இஸ்ரேலின் முடிவு குறித்தும் நான் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளேன்.

காசா முழுவதும் மனிதாபிமான உதவிகள் விரைவாகவும், பாதுகாப்பாகவும், தடையின்றியும் செல்வதை உறுதி செய்வதற்காக, அனைத்து எல்லைக் கடப்புகளையும் உடனடியாக மீண்டும் திறக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

லெபனானின் தலைநகர் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாக ஈரான் இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது.

இது போர் நிறுத்த ஒப்பந்தங்களை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதுடன் பதற்றத்தையும் அதிகரித்துள்ளது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்