பெண்களுக்கான மருந்தினால் சர்ச்சையில் சிக்கியுள்ள அமெரிக்க ஜனாதிபதி
பெண்கள் பயன்படுத்தும் மருந்து தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்வைத்த குற்றச்சாட்டை மருத்துவ ஆய்வாளர்கள் மறுத்துள்ளனர்.
டைலெனால் அல்லது பாராசிட்டமால் என்ற மருந்தை கர்ப்பிணிப் பெண்கள் பயன்படுத்தக் கூடாத, இதனால் நரம்பியல் வளர்ச்சி கோளாறுகளை ஏற்படுத்தும் ஆபத்து உள்ளதாக ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.
எனினும், மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் அவ்வாறான எந்தவொரு பாதிப்பும் இல்லையென மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் டைலெனால் மருந்தை பயன்படுத்துவது கர்ப்பிணிப் பெண்களுக்கு பாதுகாப்பானது என தெரியவந்துள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன், ஆட்டிசம் மற்றும் பாலியல் ரீதியாக பரவும் நோய்களுடன் இதனை இணைக்க போதுமான ஆதாரங்கள் இல்லை என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.




