Site icon Tamil News

புலனாய்வு தகவல்களை அமெரிக்காவுடன் பகிர்ந்துகொள்ளுமாறு இலங்கைக்கு அழுத்தம்!

இலங்கைக்கு கிடைக்கப் பெறும் சகல புலனாய்வு தகவல்களையும், அமெரிக்காவுடன் பகிர்ந்துக் கொள்ளும் வகையில் புலனாய்வு தகவல் பரிமாற்றல் மத்திய நிலையம் ஒன்றை ஸ்தாபித்தல் உள்ளிட்ட நான்கு கடும் நிபந்தனைகளை அமெரிக்காவின் சி.ஐ.ஏ.பிரதானி வில்லியம் பேர்ன் ஜனாதிபதியிடம் முன்வைத்துள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள சுதந்திர மக்கள் கூட்டணி காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்து தெரிவித்த அவர், அமெரிக்காவின் சி.ஐ.ஏ பிரிவின் பிரதான வில்லியன் பேர்ன் இரசியமான முறையில் நாட்டுக்கு வருகை தந்துள்ளார்.

22 பேர் அடங்கிய குழுவினர் இலங்கையின் தேசிய பாதுகாப்பை பாரிய அச்சுறுத்தலுக்குள்ளாக்கும்  நான்கு பிரதான நிபந்தனைகளை அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளன்.

இலங்கைக்கு கிடைக்கப் பெறும் சகல புலனாய்வு தகவல்களையும்,அமெரிக்காவுடன் பகிர்ந்துக் கொள்ளும் வகையில் புலனாய்வு தகவல் பரிமாற்றல் மத்திய நிலையம்ஒன்றை ஸ்தாபித்தல்,

இரண்டாவது விஞ்ஞான பூர்வ குடியகழ்வு கட்டுப்பாட்டு முறைமையை இலங்கை விமான நிலையங்களில் ஸ்தாபித்தல், மூன்றாவது இலங்கையுடன் தொடர்புகளை மேற்கொள்ளும் வெளிநாட்டு தொலைபேசி வலையமைப்பு தொடர்பான தகவல்களை அமெரிக்காவுடன் பகிர்ந்துகொள்ளல் மற்றும் சோபா ஒப்பந்தத்தை விரைவாக கைச்சாத்திடல் உள்ளிட்ட நான்கு பிரதான நிபந்தனைகளை அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளார்கள்.

முன்வைக்கப்பட்ட இந்த நிபந்தனைகளை மீள்பரிசீலனை செய்வதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார் எனக் கூறினார்.

Exit mobile version