Site icon Tamil News

பிரித்தானியாவை போல் 10 மடங்கு பனிக்கட்டிப் பரப்பு மாயம் – அதிர்ச்சியில் விஞ்ஞானிகள்

அண்டார்ட்டிக்கா கடல் பகுதியில் பனியின் அளவு ஜூலை மாதத்தில் மிகவும் குறைந்துவருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

பருவ நிலை தப்புதல் அதிகரித்துவரும் நிலையில், இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

முந்தைய முப்பது ஆண்டுகளை ஒப்பிட, பிரித்தானியாவை போல் 10 மடங்கு அளவு பனிக்கட்டிப் பரப்பு குறைந்துள்ளது என புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

இதற்கும் பருவ நிலை தப்புதலுக்கும் நேரடியான இணைப்பு என எதையும் உறுதிப்படுத்த முடியாதபோதும், இது மோசமானது என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வெப்ப நிலை அதிகரிப்பு அண்டார்ட்டிக்கா பனிப் பகுதியின் அளவையும் குறைக்கமுடியும். என்றாலும் இப்போதைய பெருமளவிலான குறைவுக்கு, அந்தப் பகுதியில் நிலவும் வெப்பநிலை அல்லது கடலியல் நீரோட்டங்களும் காரணமாக இருக்க முடியும் என்கின்றனர், பிரிட்டன் அண்டார்ட்டிக்கா ஆய்வாளர்கள்.

இது, இதற்கு முந்தைய அளவுகளை மீறிவிட்டது எனக் கூறுவதைவிட, அதையெல்லாம் தாண்டி எங்கோ சென்றுவிட்டது என்று கூறுகின்றனர்.

ஜூலை மாதத்தில் இதுவரை நாம் பார்த்திராதது என எடுத்துக்கொண்டுவிட முடியாது. ஏனென்றால் இதற்கு முன்னர் பனிக்கட்டி குறைவாக இருந்ததில், இப்போது குறைந்திருப்பது 10 சதவீதம். அதாவது, அதைவிட இது இன்னும் அதிக பாதிப்பு; பெரிய கட்டம் கட்டமாக நிலைமை மாறிவருவதை நாம் உணரவில்லை என்பதன் அறிகுறிதான் இது என்கிறார், பிரிட்டனைச் சேர்ந்த அண்டார்ட்டிக்கா ஆய்வாளர் கரோலின் ஹோம்ஸ்.

ஒரு கட்டத்தில்தான் அண்டார்ட்டிக்கா கடல் பனிக்கட்டிப் பரப்பை பருவநிலை தப்புதல் பாதிக்கும் என விஞ்ஞானிகள் கணித்திருந்தனர். ஆனால், 2015ஆம் ஆண்டிலேயே உலகின் மற்ற பெருங்கடல்களின் போக்கை அது மாற்றிவிட்டது என்றும் அவர் கூறுகிறார். ஒரு குன்றிலிருந்து விழுந்துவிட்டோம் என நாம் நினைக்கலாம்; ஆனால் அந்தக் குன்றுக்குக் கீழே என்ன இருக்கிறது என நமக்குத் தெரியாது என பீதியைத் தருகிறார்.

 

Exit mobile version