பிரித்தானியாவில் நடந்த பயங்கரம் – தொடரூந்தில் பயணிகள் மீது தாக்குதல் – 9 பேர் ஆபத்தான நிலையில் (update)
பிரித்தானியாவில் தொடரூந்தில் பயணிகள் மீது மேற்கொள்ளப்பட்ட கத்திக் குத்து தாக்குதல் காரணமாக பதற்றம் ஏற்பட்டுள்ளது.
கேம்பிரிட்ஜ்ஷயர் பகுதியில் நடந்த இந்த சம்பவத்தில் 10 பேர் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
படுகாயம் அடைந்தவர்களில் 9 பேர் ஆபத்தான நிலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தாக்குதல் நடந்த போது, பயணிகள் டொன்காஸ்டரில் இருந்து லண்டனில் உள்ள கிங்ஸ் கிராஸ் நோக்கிப் பயணித்துள்ளனர்.
தாக்குதல் சம்பவத்தை அடுத்து அந்தப் பகுதியிலுள்ள தொடரூந்து சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
(Visited 6 times, 7 visits today)





