Site icon Tamil News

பிரான்ஸ் ஜனாதிபதிக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலைமை

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனுக்கு பெரும் செல்வாக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரான்ஸில் ஓய்வூதிய சீர்திருத்தம் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

2018 ஆம் ஆண்டின் பின்னர் மிக மோசமாக செல்வாக்கு வீழ்ச்சியினை எதிர்கொண்டுள்ளார்.

ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தற்போது 28 சதவீத செல்வாக்குடன் உள்ளார். பெப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் 2 புள்ளிகள் குறைவாகும். அதேவேளை, 2018 ஆம் ஆண்டில் பின்னர் மீண்டும் மிக மோசமாக செல்வாகு வீழ்ச்சியினை சந்தித்துள்ளார்.

ஓய்வூதிய சீர்திருத்தம் தொடர்பாக ஜனாதிபதி மக்ரோன் விடாப்பியாக நிற்கும் நிலையில், அவரது செல்வாக்கு மிக மோசமாக வீழ்ச்சியடைந்துள்ளது.

BVA poll நிறுவனம் மேற்கொண்ட இந்த கருத்துக்கணிப்பின் முடிவுகள் திங்கட்கிழமை வெளியிடப்பட்டது.

Exit mobile version