Site icon Tamil News

பாரிஸில் தேங்கியுள்ள 7,600 தொன்னுக்கும் அதிகமான கழிவுகள் – கடும் நெருக்கடியில் மக்கள்

பாரிஸில் தேங்கியுள்ள 7,600 தொன்னுக்கும் அதிகமான கழிவுகள் குவிந்து கிடப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனை அகற்றக்கோரி பொலிஸ் தலைமை அதிகாரி, நகர முதல்வர் ஆன் இதால்கோவிடம் கேரிக்கை வைத்திருந்தார்.

ஆனால் தொழிலாளர் ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் ஆன் இதால்கோ, நடவடிக்கைகள் எதையும் மேற்கொள்ளாமல் அமைதி காக்கிறார்.

இதனால் தற்போது நிலமையை பாரிஸ் பொலிஸ் தலைமையகம் கையில் எடுத்துள்ளது.

உடனடியாக கழிவுகளை அகற்றும் நோக்கில், தனியார் கழிவு அகற்றும் ஊழியர்களை பணிக்கு அழைத்துள்ளனர்.

தனியார் ஊழியர்களை வைத்து பாரிஸில் தேங்கியுள்ள கழிவுகளை அகற்றும் பணிகள் ஆரம்பமாக உள்ளன.

கடந்த 10 நாட்களாக துப்பரவு பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதை அடுத்து, நிலமை மிகவும் மோசமடைந்துள்ளது.

இவ்விடயத்தில் உள்துறை அமைச்சர் Gérald Darmanin மற்றும் நகர முதல்வர் ஆன் இதால்கோவுக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

Exit mobile version