Site icon Tamil News

பாகிஸ்தானில் ஹோலி கொண்டாடிய இந்து மாணவர்கள் மீது திடீர் தாக்குதல்; 15 பேர் காயம்

பாகிஸ்தானில் பஞ்சாப் பல்கலை கழகத்தில் படித்து வரும் இந்து மாணவர்கள் சிலர் புதிய வளாகத்திற்கு வெளியே நேற்று ஹோலி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். ஹோலி கொண்டாட வரும்படி பேஸ்புக்கிலும் அழைப்புகள் பகிரப்பட்டு உள்ளன.

இந்நிலையில், இதனை கவனித்து இஸ்லாமி ஜமியாத் துல்பா (IJD) அமைப்பை சேர்ந்த உறுப்பினர்கள் சிலர் அந்த பகுதிக்கு வந்து உள்ளனர். அவர்களில் கைகளில் துப்பாக்கிகள் மற்றும் தடியுடன் காணப்பட்டனர். ஹோலி கொண்டாடிய மாணவர்கள் மீது அவர்கள் திடீரென கடுமையாக தாக்குதல் நடத்தி உள்ளனர்.இதுபற்றிய வீடியோக்கள் பல சமூக ஊடகத்தில் வைரலாக பரவின.

கொண்டாட்டத்திற்கு, முன் அனுமதி பெற்றிருந்த போதும், தங்கள் மீது தாக்குதல் நடந்து உள்ளது என கூறி, மாணவர்கள் துணைவேந்தர் அலுவலகத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது பாதுகாவலர்கள் தடியுடன் வந்து அவர்களை அடித்து விரட்டினர். இந்த வீடியோக்களும் வெளிவந்தன.

எங்களது அமைதி போராட்டத்திற்கு அனுமதிக்காமல் நான்கைந்து மாணவர்களை வேனில் ஏற்றி சென்று விட்டனர் என அவர்கள் தெரிவித்தனர். எங்கள் மீது நடந்த தாக்குதல் பற்றி நிர்வாகத்தினரிடமும், பவலிஸாரிடமும் தெரிவித்து உள்ளோம். வழக்கு பதிவு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கோரிக்கை விடுத்து உள்ளோம் என அவர்கள் கூறியுள்ளனர்.

Exit mobile version