பரிசோதனையின் போது தற்செயலாக வெடித்த துப்பாக்கி – ஒருவர் படுகாயம்!
மாலபே காவல் நிலையத்திற்குள் துப்பாக்கி ஒன்று தற்செயலாக வெடித்ததில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இன்று காலை துப்பாக்கியை பரிசோதித்துக்கொண்டிருந்தபோது தவறுதலாக வெடித்ததாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் சார்ஜனுக்கு தலையில் காயம் ஏற்பட்ட நிலையில் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காயமடைந்த அதிகாரியின் நிலை மோசமாக இல்லை என்று மருத்துவமனை செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
சம்பவம் குறித்து மாலபே காவல்துறயைினர் மேலதிக விசாரணைகளை தொடங்கியுள்ளனர்.





