Site icon Tamil News

தாய்லாந்து இராணுவ கூட்டுப்பயிற்சியில் பங்கேற்ற 6000 படையினர்!

தாய்லாந்தில் இன்று ஆரம்பமான கூட்டு இராணுவப் பயிற்சியில் 6000 இற்கும் அதிகமான அமெரிக்கப் படையினர் பங்குபற்றுகின்றனர்.

கோப்ரா கோல்ட் எனும் இப்பயிற்சியில் தாய்லாந்து, அமெரிக்கா, தென் கொரியா ஆகிய நாடுகளின் படையின் பங்குபற்றுகின்றனர்.

42 ஆவது வருடமாக இப்பயிற்சி நடவடிக்கை நடத்தப்படுகிறது. ஆசியாவின் மிகப் பெரிய கூட்டு இராணுவப் பயிற்சிகளில் ஒன்றாக இது விளங்குகிறது.

கடற்படையினர், தரைப்படையினர், விமானப்படையினர் இப்பயிற்சிகளில் பங்குபற்றுகின்றனர். இப்பயிற்சிக்காக 6,000 படையினரை அமெரிக்கா அனுப்பியுள்ளது.

இது, 2022 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட பயிற்சிகளுக்காக அனுப்பப்பட்ட அமெரிக்கப் படையினரின் எண்ணிக்கையைவிட 4 மடங்கு அதிகமாகும்.

Exit mobile version