Site icon Tamil News

ட்ரோன் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் உக்ரைனின் புதிய திட்டம்!

உக்ரைன்-ரஷியா போர் தொடங்கி ஒரு ஆண்டை தாண்டியும் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த போரில் உக்ரைனின் தலைநகர் கீவ் உள்ளிட்ட முக்கிய இடங்களில் ரஷிய ராணுவம் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.

இதில் உக்ரைனின் பல நகரங்கள் சீர்குலைந்தன. எனவே ராணுவத்தை பலப்படுத்துவதற்காக கடந்த ஜூலை மாதம் டிரோன்களின் ராணுவம் என்ற திட்டத்தை தொடங்க போவதாக உக்ரைன் அரசாங்கம் திட்டமிட்டது.

அதன்படி இந்த திட்டமானது உளவு டிரோன்களை பெருமளவில் வாங்குவதற்காகவும்,  ஆபரேட்டர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காகவும் தொடங்கப்பட்டது.

அதன் ஒரு பகுதியாக உக்ரைனில் இருந்து முதல் கட்டமாக 10 ஆயிரம் தன்னார்வலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு டிரோன் ஆபரேட்டர் பயிற்சி வழங்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக அவர்கள் அங்குள்ள சில தனியார் டிரோன் நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டனர்.

அங்கு அந்த தனியார் நிறுவனங்கள் சார்பில் ரஷியாவின் ஏவுகணை தாக்குதலை முறியடிக்கவும் போர் குறித்த உளவு தகவல்களை சேகரிக்கவும் பயிற்சி அளிக்கப்பட்டது.  இந்த பயிற்சி முடித்த தன்னார்வலர்கள் மற்ற வீரர்களுக்கு டிரோன் பயிற்சி அளிப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version