Site icon Tamil News

ஜெர்மனியில் தடுப்பு ஊசியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி

ஜெர்மனியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் வழங்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பு ஊசியால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் தற்பொழுது இந்த உதவி வழங்கப்படவுள்ளது.

கடந்த ஆண்டுளில்  கொரோனா தொற்று உலகம் முழுவதுமே பாரிய  அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருந்தது. அந்த வகையில் ஜெர்மனியிலும்  கொரோனா தொற்றானது பல உயிர் பலிகளை காவு கொண்டுள்ளது.

மக்களை கொரோனா தொற்றில் இருந்து மீட்பதற்காக மருத்துவர்களும், நிபுணர்களும் பல தடுப்பு ஊசிகளை கண்டுபிடித்து நடைமுறைக்கு கொண்டுவந்துள்ளனர்.

இந்நிலையில் ஜெர்மனியின் மத்திய சுகாதார அமைச்சர் காள் லௌட் அவர்கள் கொரோனா தடுப்புசி செலுத்தப்பட்டு அதனால் நீண்ட கால பாதிப்புகள் ஏற்பட்டால்  இவர்களுக்கு நஷ்ட ஈடுவழங்குவது பற்றி 12 ஆம் திகதி மார்ச் மாதம் தொலைகாட்சியில் நடைபெற்ற ஒரு உரையாடலில் இதனை தெரிவித்திருக்கின்றார்.

இதேவேளையில் லோங் கொவிட் என்று சொல்லப்படுகின்ற கொவிட் தொற்று ஏற்பட்டு நீண்ட காலம் அதனால் பாதிப்புக்கள் ஏற்பட்டால்  இவர்களுக்கும் உதவிகள் வழங்கப்படும் என்றும் அவர் கூறியிருக்கின்றார்.

 

Exit mobile version