Site icon Tamil News

சூடான் மோதலில் 413 பேர் உயிரிழப்பு – ஐநா தகவல்!

சூடானில் இடம்பெறும் மோதல்களால் 413 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 3551 பேர் காயமடைந்துள்ளனர் என உலக சுகாதார ஸ்தாபனம் இன்று தெரிவித்துள்ளது.

ஜெனீவாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் பேச்சாளர் மார்கரெட் ஹரீஸ் இதனைத் தெரிவித்தார்.

‍மோதல்களில் சிக்கி  சிறார்கள் உயிரிந்துள்ளனர் எனவும் 50 இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர் எனவும் அவர் கூறினார்.

சூடானின் இராணுவத் தளபதி அப்தேல் ஃபத்தா அல் புர்ஹானுக்கு ஆதரவான படையினருக்கும் துணை இராணுவப் படையின் தளபதி மொஹம்மத் ஹம்தானி தாக்லோவுக்கு ஆதரவான படையினருக்கும் இடையில் கடந்த 15 ஆம்  திகதி முதல் கடுமையான மோதல்கள் நடந்து வருகின்றன.

தலைநகர் கார்ட்டூமில் மக்கள் அடர்த்தி மிகுந்த பிரதேசங்களில் இன்று மோதல்கள் நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Exit mobile version