Site icon Tamil News

சிங்கப்பூரில் வாடகை வீடுகளை தவிர்க்கும் மக்கள் – குறையும் வாடகை

சிங்கப்பூரில் வீடுகளுக்கான வாடகை  குறைந்து வருவதாக தெரியவந்துள்ளது.

கடந்த ஆண்டு பெப்ரவரி மாதத்திலிருந்து கூட்டுரிமை வீடுகளுக்கான வாடகை 36 சதவீதத்திற்கு மேல் அதிகரித்திருந்தாலும் அது குறைய வாய்ப்பிருப்பதாகத் தொழில்துறை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

வாடகைதாரர்கள் அதிக விலை கொடுக்க மறுப்பதே அதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் (HDB), கூட்டுரிமை வீடுகள் முதலியவற்றுக்கான வாடகை குறித்து மிகக் குறைந்த எண்ணிக்கையிலானவர்களே விசாரிப்பதாகச் சொத்து முகவர்கள்  தெரிவித்தனர்.

புதிய கூட்டுரிமை வீடுகள் கட்டப்பட்டு வருவதால் வாடகைதாரர்களுக்குத் தற்போது அதிகமான தெரிவுகள் இருப்பதாகவும் அவர்கள் கூறினர்.

தேவைக்கேற்பக் கட்டி விற்கப்படும் வீடுகளுக்குக் (BTO) காத்திருப்பவர்கள் அந்த வீடு கிடைத்ததும் தாங்கள் குடியிருக்கும் வாடகை வீடுகளிலிருந்து வெளியேறிவிடுவார்கள். வாடகை வீடுகளுக்கான தேவை குறைவதற்கு இதுவும் ஒரு காரணமாகும்.

Exit mobile version