Site icon Tamil News

சிங்கப்பூரில் புதிய திட்டத்திற்கு தயாராகும் அரசாங்கம்

சிங்கப்பூரில் உடற்பயிற்சித் துறையின் தரத்தை அதிகரிக்க அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.

அதற்காக உடற்பயிற்சி நிபுணர்களை உள்ளடக்கிய தேசியப் பதிவகம் ஒன்றை அடுத்த மாதம் அறிமுகப்படுத்தவுள்ளதாக கலாசார, சமூக, இளையர் துறைகளுக்கான மூத்த நாடாளுமன்றச் செயலாளர் Eric Chua தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் அரசாங்க அமைப்புகள் பதிவுசெய்திருக்கும் உடற்பயிற்சி நிபுணர்களுடன் மட்டுமே இணைந்து பணியாற்றும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உடற்பயிற்சி நிபுணர்கள் மத்தியில் சீரான தன்மை இருப்பதை இந்தத் திட்டம் உறுதிசெய்யும், என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பதிவுசெய்வது கட்டாயமல்ல என்றபோதிலும் கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சு அனைத்து உடற்பயிற்சி நிபுணர்களையும் பதிவு செய்ய ஊக்குவிக்கிறது.

பொதுமக்கள் அந்தப் பதிவகத்தை அணுகி அவர்களது தேவைக்கேற்ப உடற்பயிற்சி நிபுணர்களைத் தெரிவுசெய்யலாம் என்றும் அமைச்சு கூறியது.

ஏப்ரல் 2023 முதல் மார்ச் 2024 வரை பதிவு செய்வோருக்கு முதல் ஆண்டில் தேசியப் பயிற்றுவிப்பாளர்கள் சங்கத்துடன் இலவச உறுப்பியம் கிடைக்கும்.

 

Exit mobile version