Site icon Tamil News

சிங்கப்பூரில் குறைந்த வருமானம் ஈட்டும் குடும்பங்களின் பிள்ளைகளுக்கு மகிழ்ச்சியான தகவல்

சிங்கப்பூரில் குறைந்த வருமானம் ஈட்டும் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள், பாலர் பாடசாலைகளில் சேர்வதற்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது.

பிள்ளைகள் 3 வயதாவதற்குள் பாலர் பாடசாலைகளில் சேர்வதை ஊக்குவிக்க அவ்வாறு செய்யப்படுகிறது.

KidSTART போன்ற திட்டங்களில் உள்ளவர்கள், 3,000 வெள்ளிக்குக் கீழ் குடும்ப வருமானம் பெறுவோர் ஆகியோருக்கு அது பொருந்தும்.

6,000 வெள்ளி வரை வருமானம் பெறும் குடும்பங்களுக்குத் திட்டம் பின்னர் விரிவுபடுத்தப்படும்.

இந்நிலையில், வளர்ச்சித் தேவையுடைய பிள்ளைகளுக்குக் கூடுதல் ஆதரவு கொடுக்க, இன்னும் அதிக பாலர் பாடசாலைகளில்  இடங்கள் ஒதுக்கப்படும்.

அரசாங்க நிதி ஆதரவு கொண்ட ஆரம்பக்கட்ட உதவித் திட்டங்களில் 1,400 கூடுதல் இடங்கள் அடுத்த ஈராண்டுகளில் படிப்படியாக அமைக்கப்படும்.

வளர்ச்சித் தேவை உடைய பிள்ளைகளுக்கான தனியார் சேவையை வழங்குபவர்களுக்குச் செலுத்தப்படும் கட்டணத்தில் உச்சவரம்பு நிர்ணயிக்கப்படும்.

2026ஆம் ஆண்டுக்குள் அனைவரையும் உள்ளடக்கிய ஆதரவுத் திட்டங்கள், இன்னும் கூடுதலான பாலர்பள்ளிகளில் விரிவுபடுத்தப்படும்.

2027ஆம் ஆண்டுக்குள் நடுத்தர நிலையில் அல்லது அதற்கும் மேற்பட்ட நிலையில் முன்கூட்டியே உதவி தேவைப்படும் பிள்ளைகளுக்கு 80 விழுக்காடு வரை உதவி வழங்குவது நோக்கம்.

Exit mobile version