Site icon Tamil News

கொழும்பு நகரில் கட்டங்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்!

கொழும்பு நகரில் இடைநடுவில் கைவிடப்பட்டுள்ள கட்டங்களை பொறுப்பேற்பது பற்றி அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

நகர அபிவிருத்தி அதிகார சபையின் அங்கீகாரத்துடன் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு இடைநடுவில் கைவிடப்பட்ட கட்டங்கள் பற்றிய கலந்துரையாடல் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தலைமையில்இடம்பெற்றது.

இதுதொடர்பான தீர்மானங்களை துரிதமாக எடுக்குமாறு அமைச்சர் அதிகார சபையின் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.

கூடிய வர்த்தகப் பெறுமதியைக் கொண்ட கொழும்பின் நிலப்பரப்பில் க்ரிஷ், ஹயட் போன்ற கட்டடங்களின் கட்டுமானப் பணிகள் கைவிடப்பட்டிருப்பதால் பாரிய அநீதி ஏற்பட்டிருப்பதாக இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாந்து இங்கு சுட்டிக்காட்டினார். எனவே, இவை குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் வீடுகளை கொள்வனவு செய்தவர்களிடமிருந்து தவணைகளை அறவிடுவதில் சில சலுகைவாய்ந்த நடைமுறைகளை பின்பற்றுமாறு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

அதிகார சபையின் நிதித்துறைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சலுகைகளை வழங்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அமைச்சர் ஆலோசனை வழங்கினார்.

Exit mobile version