Site icon Tamil News

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் சோமாலியாவுக்கு விஜயம்

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் சோமாலியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

அமைதி, பாதுகாப்பு மற்றும் மனிதாபிமான ஆதரவை முன்னேற்றுவதற்காக இந்த விஜயம் அமைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

பொதுச்செயலாளராக அவர் செயற்படும் நிலையில்,  ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர்  சோமாலியாவுக்குத் இந்த விஜயம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது அமைதி, பாதுகாப்பு மற்றும் மனிதாபிமானப் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாட  ஜனாதிபதி ஹசன் ஷேக் முகமதுவைச் சந்தித்ததாகவும் குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத்தை சமாளிப்பதற்கும், அனைவருக்கும் அமைதி மற்றும் பாதுகாப்பை முன்னேற்றுவதற்கும் அரசாங்கத்தின் மதிப்புமிக்க முயற்சிகள் குறித்து ஜனாதிபதியும் நானும் விவாதித்தோம்,

மேலும் மத்திய அரசுக்கும் மாநிலங்களுக்கும் இடையே வலுவான ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை நாங்கள் அடிக்கோடிட்டுக் காட்டினோம், என்று அவர் தலைநகர் மொகடிஷுவில் இடம்பெற்ற  செய்தி மாநாட்டில் தெரிவித்துள்ளார்.

 

Exit mobile version