Site icon Tamil News

எரிபொருள் விலையை குறைவடையும் : காஞ்சன விஜயசேகர!

அமெரிக்க டொலர் பெறுமதி வீழ்ச்சிஇ உலக சந்தையில் எரிபொருள் விலை குறைப்பு ஆகிய காரணிகளை அடிப்படையாக கொண்டு எரிபொருள் விலை சூத்திரத்துக்கு அமைய எதிர்வரும் ஏப்ரல் மாதம் எரிபொருள் விலை குறைக்கப்படும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இந்த அறிவிப்பை குறிப்பிட்டார்.

தொடர்ந்து தெரிவித்த அவர், இப்போது சர்வதேச நாணய நிதியத்தின் உதவி கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து நாணயக் கடிதங்களை இனி திறக்க முடியும். இதன்படி குறைந்த விலையில் விநியோகங்களை மேற்கொள்ள முடியுமாக இருக்கும். நாங்கள் எரிபொருள் விலை சூத்திரத்தை செயற்படுத்துகின்றோம்.

ஒவ்வொரு மாதமும் அதனை செய்கின்றோம். இப்போது மசகு எண்ணெய் விலை குறைவடைகின்றது. ரூபா பலமடைகின்றது. இதன்படி ஏப்ரல் மாதமளவில் திருத்தத்தின் போது மக்களுக்கு அனுபவிக்கக் கூடிய நிவாரணத்தை வழங்க நடவடிக்கை நடவடிக்கை எடுப்போம்.

அத்துடன் மின்சாரக் கட்டணத்திலும் நிவாரணங்கள் கிடைக்கும். ஜனவரியில் விலை மறுசீரமைப்பை செய்திருந்தால் ஜுன் மாதமளவில் நிவாரணத்தை வழங்கியிருக்க முடியும். எப்படியும் டிசம்பருக்குள் மின்சார கட்டணத்திலும் நிவாரணம் கிடைக்கக் கூடிய வேலைத்திட்டங்களை செய்ய முடியும்.பொருளாதார முன்னேற்றத்தின் பலனை நாட்டு மக்களுக்கு நிச்சயம் வழங்குவோம் எனக் கூறினார்.

Exit mobile version