Site icon Tamil News

உலகில் முதல் நாடாக ஆஸ்திரேலியா எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை!

ஆஸ்திரேலியாவில மனநிலை சம்மந்தப்பட்ட சிகிச்சைக்கு மேஜிக் காளான்களை, சட்டபூர்வமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உலகிலேயே முதல் நாடாக ஆஸ்திரேலியா, மனநிலை சம்மந்தப்பட்ட சில பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்க மேஜிக் காளான்களை சட்டபூர்வமாக பயன்படுத்த அனுமதி அளித்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் போதைப்பொருள் கண்காணிப்பு அமைப்பான தெரப்யூடிக் குட்ஸ் அட்மினிஸ்ட்ரேஷன் (TGA) கிட்டத்தட்ட மூன்று வருட ஆலோசனைக்குப் பிறகு இந்த நடவடிக்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

இதன்மூலம் நேற்று முதல், ஆஸ்திரேலியாவில் உள்ள மனநல மருத்துவர்கள் PTSD எனும் மனநிலை சிகிச்சைக்கு எக்ஸ்டசி என அழைக்கப்படும் MDMA மற்றும் மேஜிக் காளான்களை பரிந்துரைக்க இது வழிவகை செய்கிறது.

MDMA மற்றும் மேஜிக் காளான்கள் இரண்டு மருந்துகளும் ஆஸ்திரேலியாவில் தடைசெய்யப்பட்ட பொருட்கள்என்பது குறிப்பிடத்தக்கது.

மனச்சோர்வு மற்றும் மன உளைச்சலுக்குப் பிறகான மன அழுத்தக் கோளாறு (PTSD) சிகிச்சைக்காக, MDMA மற்றும் மேஜிக் காளான்களை பரிந்துரைக்க மருத்துவர்களை அனுமதித்த உலகின் முதல் நாடாக ஆஸ்திரேலியா மாறியுள்ளது.

Exit mobile version