Site icon Tamil News

உக்ரைனில் 8500 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா தெரிவிப்பு!

உக்ரைன் மீது ரஷ்யா தனது படையெடுப்பைத் தொடங்கியதில் இருந்து  8500 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா தெரிவித்துள்ளது.

அதிகாரப்பூர்வமாக  பிப்ரவரி 2022 இல் இருந்து இதுவரையான காலப்பகுதியில், 8490 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாகவும், 14 ஆயிரத்திற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும், ஐ.நா தெரிவித்துள்ளது.

பெரும்பாலான இறப்புகள் உக்ரேனிய அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்பட்ட பிரதேசத்திலும் ரஷ்யப் படைகளின் தாக்குதலின் கீழும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் டொனெஸ்க் மற்றும் லுகான்ஸ் பகுதிகளில் 3927 பேர் பலியாகியுள்ளதாக கூறப்படுகிறது.

உக்ரைன் மீது ரஷ்யப் படைகள் கண்மூடித்தனமான மற்றும் விகிதாசாரமற்ற தாக்குதல்களை நடத்தியதாக ஐ.நா-ஆணையிடப்பட்ட புலனாய்வு அமைப்பு கடந்த மாதம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version