Site icon Tamil News

உக்ரைனில் இருந்து இடம்பெயர்ந்தவர்களுக்காக புதிய கிராமங்களை அமைக்கும் பிரித்தானியா மற்றும் போலந்து!

உக்ரைனில் இருந்து இடம்பெயர்ந்தவர்களுக்காக புதிய கிராமங்களை அமைக்கும் பிரித்தானியா மற்றும் போலந்து!

ரஷ்யா – உக்ரைன் இடையிலான போரில் உக்ரைனை விட்டு வெளியேறியவர்களுக்காக தற்காலிக கிராமங்களை அமைக்க பிரித்தானியா மற்றும் போலந்து ஆகிய நாடுகள் நடவடிக்கை எடுத்துள்ளன.

இதன்படி பிரித்தானியா தற்காலிக கிராமங்களுக்காக 10 மில்லியன் நிதியுதவியை அறிவித்துள்ளது. பிரித்தானியாவில் இதுவரை சுமார் ஒரு இலட்சத்து 18 ஆயிரம் உக்ரேனியர்களுக்கு பிரித்தானியா அடைக்கலம் கொடுத்துள்ளது.

இந்நிலையில் லிவிவ் மற்றும் பொல்டாவா பகுதிகளில் இரண்டு கிராமங்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கிராமங்களில் 700 பேர் வசிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version