Site icon Tamil News

இலங்கை மின்சார சபையின் பாவம் ஒட்டுமொத்த மக்கள் மீதும் சுமத்தப்பட்டுள்ளது – தயாசிறி ஜயசேகர!

இலங்கை மின்சார சபையின் பாவம் ஒட்டுமொத்த மக்கள் மீதும் சுமத்தப்பட்டுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற சர்வதேச நாணய நிதிய ஒத்துழைப்பு தொடர்பில் ஜனாதிபதியின் விசேட உரை மீதான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்து தெரிவித்த அவர். இலங்கை மின்சார சபையின் பாவம் ஒட்டுமொத்த மக்கள் மீதும் சுமத்தப்பட்டுள்ளது.மின்சார சட்டத்தின் 30ஆவது பிரிவின் (பி) உறுப்புரையில் மின்பாவனையாளர்களால் ஏற்றுக்கொள்ளக் கூடிய அல்லது தாங்கிக் கொள்ள கூடிய நியாயமான மின்கட்டணம் அறவிடப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.ஆனால் தற்போது ஏற்றுக் கொள்ளக் கூடிய நியாயமான கட்டணமா அறவிடப்படுகிறது.

மின்கட்டணம் முறையற்ற வகையில் அதிகரிக்கப்பட்டது. இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் நாட்டில் இல்லாத சந்தர்ப்பத்தில்இ ஆணைக்குழுவுக்குள் முரண்பாடுகளை தோற்றுவித்துஇதமக்கு சார்பானவர்களை ஆணைக்குழு உறுப்பினர்களாக நியமித்துஇ அரசாங்கம் முறையற்ற வகையில் சட்டத்திற்கு முரணான வகையில் மின்கட்டணத்தை அதிகரித்து.

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அமைய மின்கட்டணம் அதிகரிக்கப்பட்டது என அரசாங்கம் குறிப்பிடுகிறது. நாட்டின் துறைசார் சட்டத்துக்கு எதிராக ஒரு விடயத்தை செயற்படுத்த  அறிவுறுத்தல் நிபந்தனையாக விதிக்கப்பட்டதா என்பதை சர்வதேச  நாணய நிதியம் அறிவிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

Exit mobile version