Site icon Tamil News

இலங்கை மக்களை ஏமாற்றி 16 காணிகளை கொள்வனவு செய்த Onmax DT பணிப்பாளர்

Onmax DT சட்டவிரோத பிரமிட் திட்ட நிதி நிறுவனமொன்றின் பணிப்பாளர் பல கோடி ரூபா பெறுமதியான 16 காணிகளை பொதுமக்களிடம் மோசடி செய்த பணத்தில் கொள்வனவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

குற்றப்புலனாய்வுப் பிரிவு பொலிஸார் நேற்று கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே முன்னிலையில் இதனை தெரிவித்துள்ளனர்.

சந்தேகத்திற்குரிய பணிப்பாளரிடம் விசாரணைகளை ஆரம்பித்ததன் பின்னர் குறித்த 12 காணிகளும் ஓபநாயக்க பிரதேசத்தில் வைத்தியர் ஒருவருக்கு விற்பனை செய்யப்பட்டமை தெரியவந்துள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.

மேலும் லட்சக்கணக்கான ரூபாய்களை செலவு செய்து ஒரே நாளில் 12 காணிகளை வாங்கிய வைத்தியரிடம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு உண்மையில் இந்த வைத்தியர் காணிகளை கொள்வனவு செய்தாரா? நிலம் வாங்கியிருந்தால், பணம் எப்படி வந்தது? விசாரணை நடத்தி வருவதாக குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

குற்றப்புலனாய்வுப் பிரிவினரின் தகவல்கள் பரிசீலித்த பிரதான நீதவான், சந்தேகநபரான இயக்குனருக்கு திறந்த பிடியாணை பிறப்பித்ததுடன், வைத்தியர் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு தடை விதித்து வெளிநாட்டு பயணத்தடையும் பிறப்பித்தார்.

Exit mobile version