Site icon Tamil News

இந்துக்களின் பாரம்பரியத்திற்கே ஆபத்து – மோடியிடம் வலியுறுத்தும் புலம்பெயர் அமைப்புகள்!

லங்கையில் இந்து பாரம்பரியத்தின் இருப்பிற்கே ஆபத்து ஏற்பட்டுள்ளதாக புலம் பெயர் அமைப்புகள் இந்திய பிரதமர் நரேந்திரமோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளன

ஏழு புலம்பெயர் அமைப்புகள் இணைந்து இந்த கடிதத்தை எழுதியுள்ள குறித்த கடிதத்தில், இலங்கை அரசாங்கம் இராணுவத்தின் உதவியுடன், இந்து கலாச்சாரம் பாரம்பரியம், கோவில் ஆகியவற்றை குறிவைப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கையின் வடபகுதியில் அதிகளவு மதிப்பிற்குரியதாக காணப்படும் கீரிமலை பகுதியில் காணப்பட்ட ஐந்து நூற்றாண்டு கால வரலாற்றை கொண்டுள்ள ஆதிசிவன் ஆலயம் இராணுவ ஆக்கிரமிப்பு என்ற போர்வையில் அழிக்கப்பட்டுள்ளதை ஆழ்ந்த கரிசனையுடனும் அவசரத்துடனும் நாங்கள் உங்களிற்கு தெரியப்படுத்துவதாகவும் கூறப்பட்டுள்ளது.

கோவில் இருந்த பகுதியில் அதனை அழித்துவிட்டு ஜனாதிபதி மாளிகையொன்றை கட்டியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுடன்,  இதன்மூலம் இந்துக்கள் இறந்தவர்களிற்கான இறுதி மரியாதைகளை முன்னெடுக்கும் பகுதியின் புனிதத்தை சீர்குலைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்து மத கலாச்சாரம்  அழிக்கப்படுவதை தடுப்பதற்காக இலங்கையின் வடகிழக்கு பகுதிகளில் சர்வதேச பாதுகாப்பு பொறிமுறையை அமைக்கவேண்டும் என இலங்கை அரசாங்கத்தை இலங்கைக்கு நிதி வழங்கும் சமூகம் வலியுறுத்தவேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version