Site icon Tamil News

இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று : கலந்தாய்வு கூட்டம் முன்னெடுப்பு!

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம் உள்பட சில மாநிலங்களில் கொரோனா பரவி வருவதால் இது தொடர்பில் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் மாநில அதிகாரிகளுடன் கலந்தாலோசனை செய்துள்ளார்.

மாநில பொது சுகாதாரத்துறை வளாகத்தில் மரபணு பகுப்பாய்வு ஆய்வகம் அமைக்கப்பட்ட பிறகு கொரோனா வைரஸ் வகையை அறிவதற்கான ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் மாநிலம் முழுவதும் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளை சேர்ந்த கொரோனா நோயாளிகளின் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு அவற்றின் மரபணு பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது.

அதன் முடிவுகளின்படி பார்க்கும் போது தற்போது அச்சப்படும் சூழல் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே தமிழகத்தில் பரவி வரும் கொரோனா மற்றும் இன்புளூயன்சா வைரசை கட்டுப்படுத்துவது தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

இதன்போது கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version