Site icon Tamil News

ஆயுத தரத்திலான அணுசக்திப் பொருட்களின் தயாரிப்புகளை விஸ்தரிக்குமாறு கிம் ஜோன் உன் அழைப்பு!

ஆயுத தரத்திலான அணுசக்திப் பொருட்களின் தயாரிப்புகளை விஸ்தரிக்குமாறு வட கொரிய அதிகாரிகளுக்கு அந்நாட்டு அதிபர் கிம் ஜோன் உன் அழைப்பு விடுத்துள்ளார்.

புதிய, சிறிய அணுவாயுதங்கள் எனக் கருதப்படும் பொருட்களை இராணுவ அதிகாரிகள் சகிதம் கிம் ஜோன் உன் பார்வையிடும் படங்களையும் அந்நாட்டு அரச ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

அமெரிக்காவை அச்சுறுத்துவதற்காக, தனது ஏவுகணைகளில் பொருத்தக்கூடிய சிறிய அணுவாயுதங்களை தயாரிப்பதற்கு வட கொரியா நீண்ட காலமாக முயற்சித்து வந்தது.

இந்நிலையில், மேற்படி நிகழ்வின்போது, வட கொரியாவின் அணுவாயுத நிறுவகத்தின் அதிகாரிகளால் கி;ம ஜோன் உன்னுக்கு விளக்கம் அளிக்கப்பட்டதாக வடகொரியாவின் கேசிஎன்ஏ செய்தி முகவரகம் தெரிவித்துள்ளது. அப்போது ஆயுத தரததிலான அணுசக்திப் பொருட்கள் தயாரிப்பை விஸ்தரிக்குமாறு கிம் ஜோன் உன் அழைப்புவிடுத்தார் என அச் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

இந்த ஆயுதங்கள் காட்சிப்படுத்தப்பட்டமையானது முக்கிய தொழில்நுட்ப முன்னேற்றங்களை வெளிப்படுத்துவதாக நிபுணர்கள் கூறியுள்ளதுடன், விரைவில் அணுசக்தி சோதனை ஒன்று நடத்தப்படலாம் எனவும் எச்சரித்துள்ளனர்.

Exit mobile version