Site icon Tamil News

ஆடை ஏற்றுமதி வீழ்ச்சியடைய கூடும்

இலங்கையின் ஆடை ஏற்றுமதி வருமானம் இந்தவருடம், ஒரு பில்லியன் அமெரிக்க டொலரால் வீழ்ச்சியடையக்கூடும் என இலங்கையின் உயர் மட்ட தொழில்நிபுணர் ஒருவரை மேற்கோள் காட்டி ரொய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

சர்வதேசத்தில், தேவை குறைவடைந்துள்ளதால், தெற்காசிய நாடுகளுக்கு நெருக்கடி ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிடப்படப்பட்டுள்ளது.

ஆடை, இலங்கையின் மிகப்பெரிய தொழில்துறையில் ஒன்றாக உள்ளது. கடந்த வருடம் ஆடை ஏற்றுமதி மூலம் 5.95 பில்லியன் டொலர் வருமானமாக ஈட்டப்பட்டது.

எனினும், 2023ம் ஆண்டின் முதல் காலாண்டின் ஆடை தொழில்துறையின் செயல்திறன் மற்றும் ஆடை ஏற்றுமதிகள் 13.8 சதவீதம் குறைந்து 1.3 பில்லியன் அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளதாக மத்திய வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன.

Exit mobile version