Site icon Tamil News

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் பதற்றம் தீவிரம்

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ளதென தெரியவந்துள்ளது.

தென் சீனக் கடற்பகுதியில், பகுதியில் அமெரிக்கக் கடற்துறைக் கப்பல் ஒன்றை சீனா விரட்டியதாக கூறப்படுகின்றது.

அவ்வாறு நேர்ந்திருப்பது இதுவே இரண்டாவது முறையாகும்.

பாரசெல் (Paracel) தீவுகளுக்கு அருகே, அமெரிக்காவின் USS Milius போர்க்கப்பல் சீனாவின் வட்டாரத்துக்குள் அத்துமீறையதாய்ச் சீனத் தற்காப்பு அமைச்சு தெரிவித்தது.

கடற்பகுதியில் நடக்கும் எதிர்பாராத சம்பவங்களால், கடுமையான பின்விளைவுகளை அமெரிக்கா எதிர்நோக்கலாம் என்று பெய்ச்சிங் எச்சரித்துள்ளது.

ஆனால் கடற்துறைச் செயல்முறைகளை நடத்தும் உரிமை தன்னிடம் உள்ளதாக அமெரிக்கக் கடல்படை கூறிற்று.

அனைத்துலகச் சட்டங்கள் அனுமதிக்கும் எந்தப் பகுதியிலும் செயல்பட அமெரிக்கா சூளுரைத்துள்ளது.

அமெரிக்கத் தற்காப்பு அமைச்சு சீனாவின் கருத்துகளை நிராகரித்துள்ளது.

Exit mobile version