Tamil News

ருவாண்டாவில் விபரீத முடிவை எடுத்த இலங்கையர்களுக்கு அடைக்கலம் வழங்கிய பிரித்தானியா!

ருவாண்டாவில் தற்கொலைக்கு முயன்ற இலங்கையர்களுக்கு மூன்றாம் நாடொன்றில் அகதிகளாக உரிமை வழங்குவதற்கு பிரித்தானியா தீர்மானித்துள்ளது.

2021 ஓக்டோபரில் டியாகோ கார்சியாவுக்கு வந்த முதல் 89 தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களில் ஹம்ஷிகா கிருஷ்ணமூர்த்தி, வயது 22, மற்றும் அஜித் சஜித்குமார், வயது 22 ஆகிய இருருக்குமே இவ்வாறு அடைக்கலம் கொடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.எனினும் இந்த மூன்றாவது நாடு எது என்பது இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை.

இலங்கையில் இருந்து பிரித்தானியாவிற்கு சென்று அடைக்கலம் கோரிய இரு இலங்கையர்கள் சன் டியாகோவிற்கு அனுப்பட்டிருந்தனர்.

டிக்கோ கார்சியா தீவில் தற்கொலைக்கு முயற்சி செய்த காரணத்தால் இந்த மாத ஆரம்பத்தில் ருவாண்டாவில் இருந்து பிரித்தானியாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டு இப்போது மூன்றாவது நாடு ஒன்றில் அடைக்கலம் வழங்குவதற்கு பிரித்தானிய அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளனர்.

 

இதேவேளை, அவர்களுடைய ஆவணங்களின்படி அவர்கள் மீண்டும் இலங்கைக்கு செல்ல மாட்டோம் எனவும் அவ்வாறு சென்றால் இலங்கையில் கொலை செய்யப்படுவோம் எனவும் அச்சம் இருப்பதாக கூறி இலங்கைக்கு செல்வதற்கு மறுத்துள்ளனர்.

மூன்று புகலிடக் கோரிக்கையாளர்கள் மார்ச் 13 அன்று இதே வழியில் தற்கொலைக்கு முயன்றனர். ஐந்து பேரும் மருத்துவ மற்றும் மனநல சிகிச்சைக்காக ருவாண்டாவில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.இதன் காரணமாக இப்போது மூன்றாவது நாடு ஒன்றில் அடைக்கலம்/அகதிகளாக உரிமை வழங்குவதற்கு பிரித்தானியா தீர்மானித்துள்ளது.

 

 

 

Exit mobile version