Site icon Tamil News

ரஷ்யா – உக்ரைன் போர் : என்றும் இல்லாத வகையில் உயர்ந்த இராணுவ செலவீனங்கள்!

உக்ரைன் போர் உலகளாவிய இராணுவ செலவினங்களை அதிகரித்துள்ளதாக அறிக்கையொன்று தெரிவித்துள்ளது.

உக்ரைன் – ரஷ்ய போர் ஆரம்பித்ததில் இருந்து உலகம் முழுவதும்  மொத்தம் 1.79 டிரில்லியன் பவுண்டுகள் செலவழிக்கப்பட்டுள்ளதாகவும், உக்ரைன் செலவீனங்கள், ஐரோப்பாவில் கூர்மையான உயர்வை ஏற்படுத்தியுள்ளது என்றும் ஸ்வீடிஷ் சிந்தனைக் குழு தெரிவித்துள்ளது.

உலகளவில் இராணுவ செலவீனம் 3.7 வீதம் அதிகரித்துள்ளது. இருப்பினும் ஐரோப்பாவில் இராணுவ செலவீனம் 13 வீதம் அதிகரித்துள்ளதாக அந்த குழு சுட்டிக்காட்டியுள்ளது. இது கடந்த 30 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள செங்குத்தான அதிகரிப்பு என  ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் (SIPRI) தெரிவித்துள்ளது.

உக்ரைனுக்கான இராணுவ உதவி மற்றும் ரஷ்யாவின் அச்சுறுத்தல் பற்றிய கவலைகள் பல மாநிலங்களின் செலவின முடிவுகளை வலுவாக பாதித்தன  SIPRI தெரிவித்துள்ளது.

இந்த அதிகரிப்பானது நாம் பாதுகாப்பற்ற உலகில் வாழ்கிறோம் என்பதற்கான அறிகுறி என்று  SIPRI இன் இராணுவச் செலவு மற்றும் ஆயுத உற்பத்தித் திட்டத்தின் ஆராய்ச்சியாளர் நான் தியான் கூறியுள்ளார்.

 

Exit mobile version