Site icon Tamil News

முக்கிய நாட்டின் மாணவர்களுக்கான விசாவை இரத்துச் செய்தது பிரான்ஸ்

பிரான்ஸ் மாலி உள்ளிட்ட மூன்று ஆபிரிக்க நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு உயர்கல்வி கற்கை நெறிகளுக்கான விசா வழங்குவதை நிறுத்தியுள்ளது.

மாலி, நைஜர், புர்கினா பாசோ ஆகிய மூன்று நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேற்குறித்த மூன்று ஆபிரிக்க நாடுகளிலும் இராணுவ சதி மூலம் ஆட்சிக்கவிழ்ப்பு இடம்பெற்றுள்ளது.

பிரான்சின் ஆதரவு நாடாக இருந்த இந்த மூன்று நாடுகளுடனும் தற்போது முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. அதையடுத்தே இந்த முடிவை பிரான்ஸ் எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, தற்போது பிரான்சில் கல்வி கற்று வரும் மேற்குறித்த நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள், தங்களது கல்வியினை தடையின்றி தொடர முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்சில் தற்போது இந்த மூன்று நாடுகளைச் சேர்ந்த 6,700 மாணவர்கள் பிரான்சில் கல்வி கற்று வருகிறமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version