Site icon Tamil News

பிரான்ஸில் குழந்தையின் இரத்தத்தில் போதை பொருள் – சிக்கிய தந்தை

பிரான்ஸில் நான்கு மாத குழந்தையினட இரத்தத்தில் கொக்கைன் போதைப்பொருள் கலந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை அடுத்து, குழந்தையின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

தலைநகர் பரிசில் கடந்த வாரம் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பரிஸ் 6 ஆம் வட்டாரத்தில் வசிக்கும் 30 வயதுடைய ஒருவர் தீயணைப்பு படையினரை அழைத்ததை அடுத்து, அவரது வீட்டில் இருந்து உடல்நலம் பாதிக்கப்பட்ட நான்கு மாத குழந்தை ஒன்றை மீட்டு,  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

பின்னர் குழந்தையின் மருத்துவப்பரிசோதனையில், குறித்த குழந்தை கொக்கைன் போதைப்பொருள் உட்கொண்டிருந்தமை தெரியவந்துள்ளது.

அதையடுத்து, குழந்தையின் தந்தையார் கைது செய்யப்பட்டுள்ளார். குழந்த தற்போது நலமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version