Site icon Tamil News

அபுதாபியின் முடிக்குரிய இளவரசராக ஷேக் காலித் அறிவிப்பு!

ஐக்கிய அரபு இராச்சியத்தின்  ஜனாதிபதி ஷேக் பின் ஸஹீட் அல் நஹ்யான தனது மகனை அபுதாபியின் முடிக்குரிய இளவரசராக அறிவித்துள்ளார்.

அபுதாபியின் ஆட்சியாளரான ஷேக் பின் ஸஹீட் அல் நஹ்யான் (62) ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜனாதிபதியாகவும் பதவி வகிக்கிறார். MBZ  என அழைக்கப்படும்  இவர் கடந்த மே மாதம் தனது உடன்பிறவா சகோதரர் ஷேக் கலீபாவின் மரணத்தையடுத்து அபுதாபியின் ஆட்சியாளராகவும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் மன்னராகவும் பதவியேற்றார்.

அபுதாபி ஆட்சியாளரே ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜனாதிபதியாக பதவி வகிப்பது பாரம்பரியமாகவுள்ளது.

இந்நிலையில் அபுதாபியின் முடிக்குரிய வாரிசாக தனது மூத்த மகனான ஷேக் காலித்தை (41) ஸேக் மொஹம்மத் பின் ஸயீட் அல் நெஹ்யான் புதன்கிழமை அறிவித்துள்ளார்.

வளைகுடா நாடுகளில் ஆட்சியாளர்கள் தமது சகோதரர் அல்லது மகனை முடிக்குரிய வாரிசாக நியமிப்பது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version